பெரியாழ்வார்

பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் பிறந்தவர். ‘விஷ்ணு சித்தர்’ என்பது இயற்பெயர். இவரது பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை திருப்பல்லாண்டு (12 பாசுரங்கள்), 13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) ஆகிய இரு நூல்களில் அடங்கியுள்ளன.

பாண்டியனின் ஐயம் தீர்த்து பெற்கிழி அறுத்த பெரியாழ்வார் மதுரையை அடுத்த இருந்தையூர்க் கூடலழகர் கோயிலில் குடிகொண்டுள்ள இரண்டு கோலங்களைப் பார்த்தே திருப்பல்லாண்டு பாடினார் என அறியக்கிடக்கிறது.

கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்து இவர் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்துள்ளன.

periyaalvar