செண்பகதோப்பு

செண்பகத்தோப்பு சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம்

செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதி. செண்பகத்தோப்பு செல்வது மலையேற்றம் செய்வதை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இரண்டு சக்கர அல்லது வாகனம் அல்லது மிதிவண்டி மூலம் இவ்விடம் வரலாம். காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவுகளில் காணப்படுகின்றன. மலையின்மொத்த நிலப்பரப்பில் 6.3% (சதவீதம்)மட்டுமே காடுகள் உள்ளது. அரிய தாவரங்கள் மற்றும் விலங்கின வகைகள் மலைச்சரிவுகளில் இணைந்து காணப்படுகின்றன.
senbagathoppurd

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் ‘பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்’ மற்றும் வடமேற்குப் பகுதியில் ‘மேகமலை காப்புக்காடுகள்’ அமைந்துள்ளன.

இந்த இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 100மீ (மீட்டர்) முதல் 2010மீ (மீட்டர்) வரை வேறுபடுகிறது. இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel, Ratufa macrora)

senbagathoppu1


சாம்பல் நிற அணில்:

புகலிடமாகத் திகழ்கிறது.இந்த சாம்பல்நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை அளவில் இருக்கும். இதன் நீளம் 735 மி.மீ. (மில்லிமீட்டர்), மூக்கில் இருந்து 400 மி.மீ.(மில்லிமீட்டர்) முதல் 360 மி.மீ.(மில்லிமீட்டர்) வால் வரை நீளம் இருக்கும். இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களின் உச்சியிலுள்ள சந்திக்கும் கிளைகளில் தமது கூட்டை கட்டும். இம்மாதிரி உயர்ந்த கிளைகளில் கூடு கட்டுவது, தான் ஏதேனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது மரம் விட்டு மரத்தில் தாவி அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சாம்பல் நிற அணில் தப்பிக்க வழிவகை செய்கிறது. ஒரு சாம்பல் நிற அணிலின் சராசரி வசிப்பிடப் பரப்பு 1.970 சதுர மீட்டர் முதல் 6.110 சதுர மீட்டர் ஆகும்.

இந்த சரணாலயம் பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பட்டாம்பூச்சிகள் முதலிய உயிரினங்களுக்கு இருப்பிடம். யானைகளும் இங்கே இருப்பதுண்டு. சில சமயங்களில் இடம்பெயர்ந்து வரும் யானைகள் காணப்படுகின்றன. புலி, சிறுத்தை, வரையாடு, புள்ளி மான்கள், மான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி குரங்குகள், சிங்கவால் குரங்கு, குரங்குகள், தேவாங்கு, வானரம், குரைக்கும் மான், கரடி மற்றும் பறக்கும் அணில் என மற்ற விலங்குகளும் காணப்படுகின்றன. பறவை இனங்கள் 100-க்கும் மேல் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரிய வகை பறவை இனமான ‘இந்திய பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்’ இங்கே காணப்படுகிறது.

சரணாலயம் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குளைப் பாதுகாப்பதற்காகச் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டில் உள்ள பழங்கள் மற்றும் காட்டில் உள்ள பிற சிறிய இயற்கை உற்பத்திப் பொருட்களைச் சேகரித்து எடுத்துச் செல்வதற்குக் கொடுத்து வந்த ஆண்டு குத்தகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழமரங்கள் மற்றும் மற்ற வகை மரங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் அவ்விலங்குகளின் உணவு மூலங்களை அதிகரிக்கும், அதே போல் காடுகளின் தொடர்ச்சியை உறுதி செய்யும். இவ்வுயிரினங்களின் வாழ்விடம் மேம்படுத்தப்படுவதற்காக மண் பாதுகாப்பு மற்றும் மழைநீர் அறுவடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
kattalagar

அரிய மருத்துவகுணமுள்ள தாவரங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அழகர்கோவில் பள்ளத்தாக்கு மற்றும் சதுரகிரியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. 275 மருத்துவ மூலிகைகள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்கிட் மலர் வகைகள் மற்றும் பல்வேறு மலரற்ற தாவரங்கள் இந்த காடுகளில் காணப்படுகின்றன.
water

மலையைச் சில அருவிகள் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள், குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் இங்கே கூடுகின்றனர். இங்குள்ள காட்டழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது. செண்பகத்தோப்பு மீன்வெட்டிப் பாறை நதி நீர்வீழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுபுறத்தில் பிரபலமானது. விடுமுறை தினங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் இருந்து பல மக்கள் இந்த இடத்திற்கு வருகை தருவர். செண்பகத்தோப்பு அடிவாரப்பகுதிகளிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும், பல பழங்குடி சமூகங்கள் வழிவழியாக வாழ்ந்து வருகின்றனர்.

alagarwater

நன்றி விக்கிப்பீடியா….