சதுரகிரி சுந்தரமகாலிங்கம்

சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
sadragiriboard


ஐந்து கோவில்கள்:

இம்மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன

  • மகாலிங்கம்
  • சந்தன மகாலிங்கம்
  • பிள்ளைவடியான்
  • இரட்டை லிங்கம்
  • காட்டு லிங்கம்

kugaipillayaarkaarampasuerattailingam

ஆடி அமாவாசை:

வருடந்தோறும் ஆடி அமாவாசை தினத்தன்று இம்மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமான மக்கள் மலையேறிச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

karupasamy

sandanamaha

mahalingam

கோயில் பராமரிப்பு:

மலையில் வாழும் பளியர் சாதியைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வந்த இந்தக் கோயில் திருமலை நாயக்கர் ஆட்சிகாலத்தில் சாப்டூர் பாளையக்காரராக இருந்த ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்த ராமசாமி காட்டைய நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது. 1940 ஆம் ஆண்டு வரை இக்கோவில் சாப்டூர் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

tempel001

பயண வசதி:

hills2

விருதுநகர், மதுரை பகுதிகளில் இருந்து திருவில்லிபுத்தூர்க்குப் பேருந்து வசதியுள்ளது. இங்கிருந்து வத்திராயிருப்புக்கு பேருந்து வசதிகள் உள்ளது. வத்திராயிருப்பிலிருந்து 5 கி.மி. தொலைவில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் அமைந்து உள்ளது.

தேனியிலிருந்து வருசநாடுக்குப் பேருந்து வசதியுள்ளது. (ஆடி அமாவாசை திருவிழா தினத்தன்று மட்டும் இந்த மலைப்பாதை பயன்படுத்தப்படுகிறது).


நன்றி விக்கிப்பீடியா….